பகுஜன் சமாஜ் கட்சி 17-ஆவது மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவிப்பு

Home

shadow


        நடைபெறவுள்ள 17-ஆவது மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், மக்களவைத் தேர்தலில் நான் வெற்றிபெறுவதை விட உத்தரப்பிரதேசத்தின் அனைத்து தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ், சமாஜவாதி கட்சிக் கூட்டணி வெற்றிபெற வேண்டியது மிக அவசியம் எனவும், ஏனென்றால் தான் போட்டியிடுதாக இருந்தால் தனது கட்சிக்காரர்கள் அனைவரும் தனது ஒருவருடைய வெற்றிக்காக மட்டுமே கடுமையாக உழைப்பார்கள் என்பதால் கட்சிக்கு நன்மை ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார். எனவே கட்சியின் நலன் கருதி தான் இந்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனவும், ஒருவேளை தேர்தலுக்குப் பின்னர் தஈன் மக்களவை உறுப்பினராக வேண்டிய தேவை ஏற்பட்டால், தனது கட்சியைச் சேர்ந்த ஒருவரை பதவி விலக அறிவுறுத்தி, அந்த தொகுதியில்  களமிறங்கி எளிதாக வெற்றிபெற்றுவிடுவேன் என்றும் மாயாவதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :