பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, மக்களவைத் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை' - அமித் ஷா

Home

shadow

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, மக்களவைத் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை' என்று பாரதிய ஜனதா கட்சி  தேசியத் தலைவர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, வரும் மக்களவைத் தேர்தல், வளர்ச்சியை முன்னெடுத்துள்ள பாரதிய ஜனதா கட்சிக்கும், , ஊழல் மிகுந்த "மகா கூட்டணி'க்கும் இடையேயான போட்டி எனவும் மக்களவை தேர்தலில் போட்டியிட எந்த எதிர்க்கட்சித் தலைவருக்கும் விருப்பமில்லை என தெரிவித்துள்ளார். மேலும் , பிரதமர் மோடி தோற்க வேண்டுமென விரும்பும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயவதி மக்களவை தேர்தலில் போட்டியிடாதது ஏன் என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர்  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் கூட தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் தேர்தலில், ஒருவேளை எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றாலும், அவர்களிடம் பிரதமர் ஆகும் தகுதியுடைய தலைவர்கள் எவருமில்லை எனவும் தெரிவித்துள்ளார்

இது தொடர்பான செய்திகள் :