பசிபிக் சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சில் வெளியிட்டுள்ளது

Home

shadow

  

         தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மிக வேகமான வளர்ச்சியைக் கொண்ட 10 விமான நிலையங்களுக்கான பட்டியலில் இந்தியாவின் மூன்று விமான நிலையங்கள் இடம்பிடித்துள்ளன.

செப்டம்பர் மாதத்தில் மிக வேகமான வளர்ச்சியைப் பதிவுசெய்த விமான நிலையங்களுக்கான பட்டியலை ஆசிய பசிபிக் சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் டெல்லி, பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய விமான நிலையங்கள், இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளன. டெல்லி விமான நிலையம் சென்ற ஆண்டை விட 10 புள்ளி 7 சதவீதமும், பெங்களூரு விமான நிலையம் 25 புள்ளி 8 சதவீதமும்மும்பை விமான நிலையம் 8 புள்ளி 2 சதவீதமும் கூடுதல் பயணிகளை ஈர்த்து வளர்ச்சியை பதிவுசெய்துள்ளன. இவற்றுக்கு அடுத்தபடியாக சென்னை, ஹைதராபாத் விமான நிலையங்கள் உள்ளன. 

இது தொடர்பான செய்திகள் :