பணமதிப்பிழப்பு நடவடிக்கை - அருண் ஜெட்லீ

Home

shadow

  

      பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் டிஜிட்டல் பரிவர்தனை அதிகரித்து இருப்பதாகவும், வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரு மடங்காகி உள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் அருண்  ஜெட்லீ தெரிவித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் இரண்டாம் ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண்  ஜெட்லீ தெரிவித்துள்ளார். தனது முகநூல் பதிவில் அவர், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் புழக்கத்தில் இருந்த பணம் அனைத்தையும் பறிமுதல் செய்து விட்டதாக விமர்சித்து வருகின்றனர் என்றும், ஆனால் பணம் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்பது தங்கள் நோக்கம் இல்லை எனவும், அதனை முறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்திற்குள் கொண்டு வந்து, வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதே தங்களின் இலக்கு எனவும் தெரிவித்துள்ளார். ரொக்க பரிவர்த்தனையில் இருந்து டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு இந்தியாவை மாற்ற மிகப்பெரிய மாற்றம் ஒன்றை அமல்படுத்திய தேவை இருந்ததாகவும், இதனால் வரி வருவாயில் மிகப் பெரிய தாக்கம் ஏற்படும் என அறிந்திருந்ததாகவும் தெரிவித்துள்ள அவர்பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும், டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :