பயங்கரவாத இயக்கங்களில் சேரும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்

Home

shadow

காஷ்மீர் இளைஞர்களை மனமாற்றம் செய்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகளை பயங்கரவாத அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. இத்தகைய இளைஞர்களால் நிகழ்த்தப்படும் வன்முறைச் சம்பவங்கள், பாதுகாப்பு படையினருக்கு புதிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், பயங்கரவாத இயக்கங்களில் சேர்ந்த இளைஞர்கள் எண்ணிக்கை இகடந்த ஆண்டு 88-ஆக இருந்த நிலையில் நிகழாண்டில் 117-ஆக உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. 

போலீசார் பதிவு செய்யும் வழக்குகளின் அடிப்படையில் இந்த கணக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால்  எண்ணிக்கை  அதிகமாக இருக்கவே வாய்ப்பிருப்பதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். ஏனென்றால் பெரும்பாலான இளைஞர்களின் பெற்றோர் அச்சம் காரணமாக புகார் தெரிவிப்பதில்லை என்று குறிப்பிடுகின்றனர். லஷ்கர் ஏ தொய்பா இயக்கத்தில் சேர்ந்து, பின்னர் மனம் திருந்தி சரணடைந்த இளைஞர் மஜித் கான் போன்று அனைவரும் திரும்பி வந்து இயல்பான வாழ்க்கையை தொடர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :