பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிடில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது - சுஷ்மா ஸ்வராஜ் திட்டவட்டம்

Home

shadow

தங்கள் மண்ணில் செயல்பட்டுவரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காத வரை அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வெளியுறவு கொள்கை என்ற தலைப்பில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பயங்கரவாதத்தை ஒரு புறம் வைத்துக் கொண்டிருக்கும் நாட்டுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியாது என்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியிறுத்தினார். பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தால், அந்நாட்டு அரசுடன் நட்பு பாராட்ட இந்தியா தயாராக உள்ளதாகவும் இஸ்லாமிய ஒத்துழைப்பு மாநாட்டில் 50 ஆண்டுகளுக்கு பிறகு பங்கேற்க இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும்  தெரிவித்தார்.  பல்வேறு நாடுகளுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்வதால் இந்தியாவுக்கு என்ன கிடைக்கிறது என்று பலர் என்னிடம் கேள்வி எழுப்பி உள்ளதாக தெரிவித்த அவர்  இவ்வாறு நட்பு பாராட்டியதால்தான் யேமனில் இருந்து 7 ஆயிரம்  பேரை விடுவிக்க முடிந்தது என தெரிவித்தார்.  

இது தொடர்பான செய்திகள் :