பயங்கரவாதத்தை அரசு கொள்கையாக சில நாடுகள் கடைப்பிடிக்கும் வரை பயங்கரவாதம் நீடிக்கவே செய்யும் - பிபின் ராவத்

Home

shadow

                       பயங்கரவாதத்தை அரசு கொள்கையாக சில நாடுகள் கடைப்பிடிக்கும் வரை, தெற்காசிய பிராந்தியத்தில் பயங்கரவாதம் நீடிக்கவே செய்யும் என்று இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.


டெல்லியில் ரெய்சானா பேச்சுவார்த்தை என்ற பெயரில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொண்டுபேசிய அவர், மத தீவிரவாதத்தை பரப்புவதற்கு சமூகவலைதளங்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது என்றும்  சமூகவலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் வித்தியாசமான வகையில், மதத் தீவிரவாதம் பரப்பப்படுவதாகவும் இதுவே பயங்கரவாத அமைப்புகளில் கல்வி கற்ற இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் சேருவதற்கு காரணமாக உள்ளதாகவும் கூறியுள்ளார். பயங்கரவாதத்தை அரசு கொள்கையாக சில நாடுகள் கடைப்பிடிக்கும் வரையில், தெற்காசிய பிராந்தியத்தில் பயங்கரவாதம் தொடர்ந்து நீடிக்கவே செய்யும் என்றும் பயங்கரவாதம் என்பது தற்போது புதிய வகை போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுவதற்கு, தலிபான் அமைப்புகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் பிபின் ராவத் கூறியுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :