பயனாளிகளின் வீட்டிற்கே சென்று, ரேஷன் பொருட்களை, விநியோகம் செய்யும் திட்டத்திற்கு தடை

Home

shadow

திருமண பதிவு சான்றிதழ், சாதி சான்றிதழ், ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட 40 பொது சேவைகளை, பயனாளிகளின் வீட்டிற்கே சென்று வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்தது. இதன் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவை நடைமுறைக்கு வந்தால், மக்கள் நீண்ட வரிசையில் நிற்பது தடுக்கப்படுவதுடன், அவர்களின் நேரமும் சேமிக்கப்படும். இந்நிலையில் டெல்லி அரசின் இந்த திட்டத்திற்கு துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் முட்டுக்கட்டை போடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திட்டத்தை ஆளுநர் நிராகரித்துவிட்டதாகவும், இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்து மாற்று வழியை பரிந்துரைக்குமாறு டெல்லி அரசை அறிவுறுத்தி உள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான செய்திகள் :