பாகிஸ்தானில் இந்து சிறுமிகள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட விவகாரம்: வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடும் கண்டனம்

Home

shadow

பாகிஸ்தானில் 15 வயதிற்குட்பட்ட இரண்டு இந்து சிறுமிகள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்திற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர், பாகிஸ்தானில் ஹோலி பண்டிகையின்போது 2 ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு மதம் மாற்றப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து, அங்குள்ள இந்தியத் தூதரிடம் விளக்கம் கேட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஃபாவத் ஹுசைன், இந்து சிறுமிகள் மதமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவது பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்னை என்றும், அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இந்தியாவிலுள்ள சிறுபான்மையினரைப் பற்றி கவலைப்பட்டால் போதும்  என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சுஷ்மா ஸ்வராஜ் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், சிறுபான்மையினர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக வெளியான செய்தி குறித்து விளக்கம் மட்டும்தான் கேட்டதாகவும்,  இந்தக் கேள்வியைக் கண்டு பாகிஸ்தான் அமைச்சர் அஞ்சுவது, அவர்களது குற்ற உணர்ச்சியைக் காட்டுகிறது  என்றும்  தனது சுட்டுரைப் பதிவில் விமர்சித்திருந்தார். இந்த நிலையில்  2 இந்து சிறுமிகள் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக வெளியான தகவல் குறித்து விசாரணை நடத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளதாக பாகிஸ்தான் நாட்டு தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஃபாவத் ஹுசைன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கொடியில் உள்ள வெள்ளை நிறம், சிறுபான்மையினரைக் குறிப்பதாகவும், அத்தகைய சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாப்பது தங்களது கடமை எனவும் அவர் தனது பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :