பாகிஸ்தானுக்கு - அமெரிக்க எச்சரிக்கை

Home

shadow

                            இந்தியா மீது மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்தால், அது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தும் என அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்முகமதுவின் உறுப்பினர்களில் ஒருவர் காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்ற நிலை, சர்வதேச அளவில், பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இந்தியாபாகிஸ்தான் இடையே மோதலை தவிர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், இந்தியா மீது மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்தால், அது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தும் என அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியான, நிலையான மற்றும் மாற்ற முடியாத நடவடிக்கையை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :