பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண் ஜாதவை அவரது தாயாரும், மனைவியும் நேரில் சந்தித்து பேசினர்

Home

shadow

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவை, உளவு பார்த்ததாகக் கூறி பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. பின்னர் அவருக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்தது. இதனையடுத்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய அரசு தொடர்ந்த வழக்கில், தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது. இந்தியாவின் தொடர் வற்புறுத்தலால், குல்பூஷணை அவரது தாயாரும், மனைவியும் சந்திக்க அனுமதி அளித்த பாகிஸ்தான் அரசு அதற்கான விசாவும் வழங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று விமானம் மூலம் இஸ்லாமாபாத் சென்ற குல்பூஷணின் மனைவியும் தாயாரும், முதலில் இந்தியத் தூதரகம் சென்றனர். பின்னர் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்திய துணைத் தூதர் ஜே.பி.சிங் உடன் சென்றார். அங்கு குல்பூஷணை அவரது குடும்பத்தினர் சந்தித்தனர். இது தொடர்பாக ஊடகங்கள் நேரடியாக செய்தி வெளியிட பாகிஸ்தான் அரசு தடை விதித்திருந்தது. இருப்பினும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் பின்னர் வெளியிடப்பட்டன.

இதற்கிடையே தனது குடும்பத்தாரை சந்திக்க அனுமதி அளித்த பாகிஸ்தான் அரசுக்கு குல்பூஷண் ஜாதவ் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :