பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு - ஜம்மு காஷ்மீரில் நான்கு தீவிரவாதிகள் பலி

Home

shadow

           பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு - ஜம்மு காஷ்மீரில் நான்கு தீவிரவாதிகள் பலி

 

         காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் இருவர் அண்மையில் தீவிரவாத இயக்கத்தில் இணைந்த காவல்துறையினர் என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

 

        புல்வாமா மாவட்டம் லாசிபோரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ராணுவத்தினர், காவல்துறையினருடன் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 

      இதில் இரண்டு பேர் காவல்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது கடந்த வாரம் திவிரவாத இயக்கத்தில் இணைந்ததாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

      

      இவர்கள் கடந்த வியாழக்கிழமை முதல் பணிக்கு வரவில்லை என்றும் அவர்கள் தங்களது ரைஃபிள்களுடன் சென்று தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து விட்டதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

 

      இதனிடையே தீவிரவாதிகளுக்கு உதவும் வகையில் 7 ரைஃபிள்கள் 1 பிஸ்டலை கடந்த செப்டம்பர் மாதம் திருடியதாக மற்றொரு காவல் அதிகாரி மீது குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :