பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சு - ஸ்ரீநகரில் தொடரும் பதற்றம்

Home

shadow

               பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சு - ஸ்ரீநகரில் தொடரும் பதற்றம்

 

              ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினர் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

 

            ஸ்ரீநகரில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் மற்றும் ஜாகீர் மூசாவுக்கு ஆதரவாக பதாகைகளையும், பேனர்களையும் ஏந்தி வந்த இளைஞர்கள், இந்தியாவுக்கு எதிராக பிரிவினைவாத முழக்கங்களை எழுப்பினர்.

          இந்த நிலையில் திடீரென பாதுகாப்புப் படையினர் மீது அந்த இளைஞர்கள் கற்களை வீசித்தாக்குதல் நடத்தினர்.  இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும், போலீசாரும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி, போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த சம்பவத்தால், ஸ்ரீநகரில் பதற்றம் நிலவி வருகிறது.

 

          இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த மற்றொரு பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :