பாரத ஸ்டேட் வங்கி அபராத தொகை குறைப்பு

Home

shadow


சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் வசூலித்து வந்த அபராத தொகையின் அளவை பாரத ஸ்டேட் வங்கி குறைத்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் அபராதம் வசூல் செய்யும் முறையை கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அமல்படுத்தப்பட்ட 8 மாதங்களில் ஆயிரத்து 771 கோடி ரூபாயை அபராதமாக  பாரத ஸ்டேட் வங்கி வசூல் செய்த விவகாரம் கடும் விமர்சனத்திற்கு ஆளானது. இந்த நிலையில் தற்போது அபராத தொகையினை 75 சதவீதம் அளவுக்கு குறைப்பு செய்து பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மெட்ரோ மற்றும் நகர் புறங்களில் 50 ரூபாயில் இருந்து 15 ரூபாயாகவும், டவுண் மற்றும் ஊரக பகுதிகளில் 40 ரூபாயில் இருந்து 12 ரூபாயாகவும் அபராத தொகை அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஜி.எஸ்.டி-யும் சேர்த்து வசூலிக்கப்படும். ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வருகிறது. பாரத ஸ்டேட் வங்கியின் இந்த நடவடிக்கையால் 25 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பயனடைவர்.

இது தொடர்பான செய்திகள் :