பாரதிய ஜனதா அலை நாடு முழுவதும் வீசுவதால் எதிர்க்கட்சிகள் அச்சம் - பிரதமர் மோடி

Home

shadow

                      கடந்த மக்களவைத் தேர்தலைவிட தற்போது மிகப்பெரிய பாரதிய ஜனதா அலை நாடு முழுவதும் வீசுவதால், எதிர்க்கட்சிகள் அச்சத்தில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி
, நமோ செல்போன் செயலி மூலம் அவ்வப்போது பாரதிய ஜனதா தொண்டர்களிடையே உரையாற்றி வருகிறார். 


இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசம் மேற்கு, காசியாபாத், ஹசாரிபாக், ஜெய்ப்பூர் ஊரகம் மற்றும் நவாடா ஆகிய மக்களவைத் தொகுதிகளை சேர்ந்த பாரதிய ஜனதா தொண்டர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்


தில், 2013 - 2014ம் ஆண்டுகளில் இருந்ததை விட தற்போது நாடு முழுவதும் பாரதிய ஜனதா அலை வீசுவதாகவும், இதனால் எதிர்க்கட்சிகள் அச்சமடைந்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்


பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்த மக்கள், ஊழலில் திளைத்த காங்கிரஸை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்தனர் என்றும், எதிர்க்கட்சியாக கூட தங்கள் கடமையை காங்கிரஸார்  ஆற்றவில்லை எனவும் மோடி குற்றஞ்சாட்டினார்


பாரதிய ஜனதாவின் ஒவ்வொரு தொண்டரும் தனது வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதியில் கட்சியை பலப்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்

இது தொடர்பான செய்திகள் :