பாரதிய ஜனதா கட்சியினர் பணக்காரர்களுக்கு மட்டுமே காவலாளிகளாக செயல்படுகின்றனர் - பிரியங்கா காந்தி

Home

shadow

                   பாரதிய ஜனதா கட்சியினர் பணக்காரர்களுக்கு மட்டுமே காவலாளிகளாக செயல்படுவதாகவும், ஏழைகள் குறித்து அவர்கள் கவலை கொள்வதில்லை எனவும் காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இரவு பகலாக உழைக்கும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய 10 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை தொகுதையை உத்தர பிரதேச அரசு வழங்க மறுத்து வருவதாக குற்றம் சாட்டியிருந்தார். நிலுவை தொகை வழங்கப்படாததால், கரும்பு விவசாயிகளின் குழந்தைகளின் கல்வி, உணவு, சுகாதாரம், அடுத்த சாகுபடி உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாரதிய ஜனதாவின் காவலாளிகள் பணக்காரர்களுக்காக மட்டுமே பணியாற்றி வருகின்றனர் எனவும் ஏழை மக்கள் குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை என்றும் பிரியங்கா காந்தி விமர்சித்திருந்தார். பாரதிய ஜனதாவின் நானும் காவலாளி பிரச்சாரத்தை குறிப்பிட்டு வர் இவ்வாறு பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பான செய்திகள் :