பிரச்னைகளின் கூடாரமான முகநூல், லட்சக்கணக்கானோரின் கடவுச்சொல்லுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை என கைவிரித்த நிறுவனம்

Home

shadow

முகநூலை பயன்படுத்துவர்களில் லட்சக்கணக்கானோரின் கடவுச்சொல்லுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை என்பதை அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

முகநூல் நிறுவனத்தின் சர்வர்களில் எவ்வித பாதுகாப்பும் ஏற்பாடுகளும் இன்றி, லட்சக்கணக்கான பயனாளிகளின் முகநூல் கடவுச் சொற்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் யார் வேண்டுமானாலும் கடவுச்சொற்களை தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலை உள்ளதால் தனிநபர் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது. இது தொடர்பாக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள முகநூல் நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் பயனாளிகள் தகவல் சேமிப்புப் பிரிவின் துணைத் தலைவர் பெட்ரோ, முகநூல் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் தவிர வேறு எவரும் பயனாளிகளின் கடவுச்சொல்லை தெரிந்து கொள்ள முடியாது எனவும்  முகநூல் பணியாளர்கள் யாரும் கடவுச்சொல் உள்ள கணினிக் கோப்புகளை திறந்தது இல்லை என தெரிவித்துள்ளார், மேலும்  அவற்றை தவறாகப் பயன்படுத்தினார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது என தெரிவித்துள்ள அவர் எத்தனை லட்சம் பயனாளிகளின் கடவுச்சொற்கள் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது என்பது சரியாகத் தெரியவில்லை எனவும் குறிப்பாக 2012-ஆம் ஆண்டுக்கு பிறகு தொடங்கப்பட்ட முகநூல் கணக்குகளின் கடவுச்சொற்கள் பாதுகாப்பு இல்லாமல் உள்ளன என தனது வளைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  

இது தொடர்பான செய்திகள் :