பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Home

shadow

குஜராத் தேர்தலை சீர்குலைக்க பாகிஸ்தானுடன் இணைந்து காங்கிரஸ் சதி செய்வதாக தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் அந்த விவகாரத்தில் இணைத்து பேசியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் காங்கிரஸ் பிரச்சினை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே கூட்டத் தொடர் ‘தொடங்கிய கடந்த 15-ம் தேதி முதல், காங்கிரசின் அமளியால் நாடாளுமன்றம் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இன்றும் பிரதமர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி இரு அவைகளிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றனர். இதனால் அவைகள் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. மாநிலங்களவை இன்று முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டதோடு, வரும் 27-ஆம் தேதி அவை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :