பிரதமர் மோடிக்கு மாலத்தீவு அரசின் நிஷான் இஸ்ஸுதீன் விருது

Home

shadow

           பிரதமர் மோடிக்கு மாலத்தீவு அரசின் நிஷான் இஸ்ஸுதீன் விருது

 
          பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலத்தீவு அரசின் மிக உயரிய விருதான நிஷான் இஸ்ஸூதீன் விருதை வழங்கி கவுரவிக்க மாலத்தீவு அரசு தீர்மானித்துள்ளது.

 
        இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறை பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடி, இருநாள் அரசு முறை பயணமாக இன்று மாலத்தீவு நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

 
       இந்த நிலையில் மாலத் தீவு வெளிநாட்டினருக்கு அளிக்கும் மிக உயரிய ‘நிஷான் இஸ்ஸுதீன்’விருதை பிரதமர் மோடிக்கு  வழங்கி கவுரவிக்க மாலத்தீவு அரசு தீர்மானித்துள்ளது.

 
       இதுதொடர்பான அறிவிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர்  அப்துல்லா ஷாஹித், ‘மாலத்தீவு அரசால் வெளிநாட்டினருக்கு அளிக்கப்படும் மிக உயரிய ‘நிஷான் இஸ்ஸுதீன்’ (The Most Honourable Order of the Distinguished Rule of Nishan Izzuddeen) விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்க மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முஹம்மது சோலிஹ் தீர்மானித்துள்ளார்’என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :