புதுச்சேரி - நாராயணசாமி ஆய்வு

Home

shadow


      அரசு அலுவலக வாகனங்களை சொந்த காரணங்களுக்காக பயன்படுத்தும் அரசு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி தலைமை செயலகத்தில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தலைமை செயலக ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை என புகார் எழுந்ததையடுத்து இன்று ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்தார். பணிக்கு உரிய நேரத்தில் வராத ஊழியர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்த அவர், தலைமை செயலகத்திலே ஊழியர்கள் உரிய நேரத்துக்கு வேலைக்கு வராதது கவலையளிப்பதாக தெரிவித்தார். அரசு அலுவலக வாகனங்களை சொந்த காரணங்களுக்காக பயன்படுத்தும் அரசு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்

இது தொடர்பான செய்திகள் :