புத்த மதத்தினர், ஜெயின்ஸ், கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் குடியுரிமை அளிக்கப்படும் - அமித் ஷா

Home

shadow

நாடு முழுவதும் குடியுரிமை மசோதாவும், தேசிய பதிவு செய்யப்பட்ட குடிமக்கள் பட்டியலும் அமல்படுத்தப்படும் என பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல், வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்த, இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜெயின்ஸ், கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் குடியுரிமை அளிக்கப்படும் என தெரிவித்தார். மேலும், நாடு முழுவதும் குடியுரிமை மசோதாவும், தேசிய பதிவு செய்யப்பட்ட குடிமக்கள் பட்டியலும் அமல்படுத்தப்படும் என தெரிவித்த அவர், இது குறித்து அகதிகள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும், ஊடுருவல்காரர்களே இது குறித்து அச்சப்படுவர் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மேற்கு வங்கத்தில் தனது பேரணிகளுக்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அனுமதி அளிக்கவில்லை என்றும், தற்போது அவரது பேரணிகளுக்கு மக்கள் யாரும் செல்வதில்லை என தெரிவித்தார். மேலும், மேற்கு வங்க மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் எனவும் கூறினார்.


இது தொடர்பான செய்திகள் :