பூரி ஜெகன்நாதர் கோவில் செல்போன் தடை.

Home

shadow

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகன்னாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், செல்போன்களில் கோவிலை படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது ஆகம விதி மீறல் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து புத்தாண்டு தொடக்கமான நாளை முதல் பூரி ஜெகன்நாதர் கோவிலுக்கு செல்போன் கொண்டு வரத் தடை விதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தடையை மீறும் பக்தர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.   

இது தொடர்பான செய்திகள் :