பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரி விதிப்பு வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்

Home

shadow

 

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரி விதிப்பு வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து அலட்சிப்படுத்தி வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

 

மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பணக்காரர்களுக்கு பயனளிக்கும் வகையில் மட்டுமே செயல்படுவதாக கூறினார். பாரதிய ஜனதாவுக்கு எதிரான மக்களின் உணர்வுதான், அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்று குறிப்பிட்ட அவர்,  வெறும் அரசியல் லாபத்திற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணையவில்லை என்றும் குறிப்பிட்டார். மக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரி விதிப்பு வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதாகவும் ராகுல் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பான செய்திகள் :