பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் வகையில் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் குமாரசாமி தலைமையில் நடந்த அமைச்சர் அவை கூட்டத்தில் முடிவு

Home

shadow

 

கர்நாடகத்தில் கல்லூரி படிப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் வகையில் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் நடந்த அமைச்சர் அவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


கர்நாடகத்தில் ஏற்கனவே 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வியை அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில் கல்லூரி படிப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் திட்டத்திற்கு அமைச்சர் அவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டம் மற்றும் சட்டசபை விவகாரத் துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா நேற்று கூறுகையில், கர்நாடகத்தில் கல்லூரி படிப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க அமைச்சர் அவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டம் நடப்பு கல்வி ஆண்டு (முதலே அமல்படுத்தப்படுகிறது எனவும் தெரிவித்தார். இதற்காக ஆண்டுக்கு 95 கோடி ரூபாய் செலவாகும் எனவும் இதன் மூலம் மாநிலத்தில் 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் பயன் பெறுவார்கள் எனவும் குறிப்பிட்டார். விவசாய நிலத்தை விவசாயம் அல்லாத நோக்கங்களுக்கு பயன்படுத்த விரும்புபவர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் ஒரு மாதத்திற்குள் அதற்கு அனுமதி வழங்க இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளதாகவும் இதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணபிக்க வேண்டும் எனவும் கூறினார்.

இது தொடர்பான செய்திகள் :