பேரிடர்களால் ஏற்படும் பொருளாதார இழப்பு மற்றும் உயிரிழப்புக்களை இந்தியா அதிக அளவில் சந்தித்துள்ளது - ஐ.நா அறிக்கை

Home

shadow

                                        கடந்த 20 ஆண்டுகளில் தேசிய பேரிடர் பணிகளுக்காக 5 ஆயிரத்து 946 கோடி ரூபாயை இந்திய அரசு செலவிட்டுள்ளதாக ஐ.நா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய பேரிடர் தொடர்பாக ஐ.நாவின் தேசிய பேரிடர் அபாய குறைப்பு கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தேசிய பேரிடரால் பொருளாதார அளவில் கடுமையாக பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் பேரிடர்களால் இந்தியாவின் பொருளாதார இழப்பு 120 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் பருவநிலை சார்ந்த பேரிடர்களால் ஏற்பட்ட இழப்பு மட்டும் 151 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா 2வது இடத்திலும் , ஜப்பான் 3வது இடத்திலும் உள்ளன. தேசிய பேரிடர்களால் ஏற்படும் பொருளாதார இழப்பு மற்றும் உயிரிழப்புக்களை இந்தியா அதிக அளவில் சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :