பொதுமக்களுடன் நட்புறவை ஏற்படுத்துவதில் போலீசார் கவனம் செலுத்த வேண்டும் - ராஜ்நாத் சிங்

Home

shadow

 

பொதுமக்களுடன் நட்புறவை ஏற்படுத்துவதில் போலீசார் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.


டெல்லி போலீசாருக்கு ரோந்து வாகனங்கள் வழங்கும் விழாவில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர்புகார் அளிக்க வருப வரிடம் போலீசாரால் அமைதியாகப் பேச முடியாதாஎன்றும் நீண்ட நேரம் காத்திருந்தால், அவர்களுக்கு தண்ணீர் வழங்க முடியாதா? எனக் கேள்வி எழுப்பினார். காவல் நிலையங்களில்  புகார் அளிக்க வருபவர்களுக்கு வசதியாக தேநீர் கடைகள் ஏற்படுத்த காவல் ஆணையர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். அனைவருக்கும் முன்மாதிரியாக போலீசார் ஏன் திகழக்கூடாது. என்று கேள்வி எழுப்பிய அவர் காவல் நிலையங்கள் மற்றும் போலீசார் குறித்து பொது மக்கள் அனுப்பும் கருத்துக்கள் கவலை அளிப்பவையாக உள்ளதாக குறிப்பிட்டார்.  உதவிக்காக காவல் நிலையம் வருபவர்களை கவுரவத்துடன் நடத்த வேண்டும் என்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பான செய்திகள் :