மகாராஷ்டிரா - விவசாயிகள் பேரணி

Home

shadow


பயிர்க் கடன் தள்ளுபடி, மானியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மகாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கு பேரணியாக வந்தனர். தங்களின் கோரிக்களை வலியுறுத்தி இன்று மும்பை சட்டமன்றத்தை விவசாயிகள் முற்றுகையிட உள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவுடன் அனைத்து இந்திய கிசான் சபா அமைப்பு நடத்தும் இந்த போராட்டத்தில் மகாராஷ்டிரா முழுவதும் இருந்து வந்துள்ள விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். கடந்த 6-ம் தேதி நாசிக் இருந்து நடைபயணமாக கிளம்பிய விவசாயிகள் இன்று அதிகாலை மும்பையில் உள்ள அசாத் மைதானத்தை வந்தடைந்தனர். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்கும் விவசாயிகள், பின்னர் சட்டமன்ற முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். முற்றுகை போராட்டத்திற்கு முன்னதாக மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிசை சந்திக்கும் விவசாயிகள், அவரிடம் தங்கள் கோரிக்கையை தெரிவிக்க உள்ளனர். விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்க மூத்த அமைச்சர்கள் கொண்ட குழு ஒன்றையும் முதல்வர் அமைத்துள்ளார். விவசாயிகளின் போராட்டத்திற்கு சிவசேனா, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள்  ஆதரவு தெரிவித்துள்ளன.

இது தொடர்பான செய்திகள் :