மக்களவை தேர்தலில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது: நவீன் பட்நாயக் கருத்து

Home

shadow

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு எந்த தேசியக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என ஒடிஸா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

ஒடிஸாவில் மக்களவைத் தேர்தலுடன், மாநில சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஒடிஸாவின் நயாகரில்  தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதலமைச்சர் நவீன் பட்நாவீஸ், மக்களவைத் தேர்தலின் முடிவில் மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு எந்த தேசியக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனவும் மத்தியில் ஆட்சியாளர் யார் என்பதை முடிவு செய்வதிலும், ஆட்சியிலும் பிஜு ஜனதா தளம் முக்கியப் பங்கு வகிக்கும் என தெரிவித்தார். மேலும் 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, ஒடிஸாவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்போம் என்று பாரதிய ஜனதா கட்சி வாக்குறுதி அளித்ததாக தெரிவித்த அவர் ஒடிஸாவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைத்திருந்தால் நமது மாநிலத்தின் வளர்ச்சி இதைவிட சிறப்பாக இருந்திருக்கும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்ரயில்வேக்கு அதிக வருமானம் தரும் மாநிலங்களில் ஒன்றாக ஒடிஸா திகழ்வதாகவும் ஆனால், ரயில்வே திட்டங்களில் ஒடிசா மாநிலம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்

இது தொடர்பான செய்திகள் :