மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்பிக்கள் பட்டியல் குடியரசு தலைவரிடம் ஒப்படைப்பு

Home

shadow

         மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்பிக்கள்  பட்டியல் குடியரசு தலைவரிடம் ஒப்படைப்பு 

       மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்பிக்களின் பட்டியல், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்திடம் ஒப்படைத்தார்தலைமை தேர்தல் ஆணையர். 

        தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, குடியரசு தலைவர் மாளிகையில்,  ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். அப்போது, நாடு முழுவதும் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 542 புதிய எம்.பிக்களின் பட்டியலை, சுனில் அரோரா, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம்  ஒப்படைத்தார். இதனிடையே, 16- வது மக்களவையை கலைத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :