மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை இறுதி செய்வதில் இழுபறி

Home

shadow

                  மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருவதாக கூறப்படும் நிலையில், அக்கட்சியின் மத்திய தேர்வு நிலைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.


மக்களவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் களமிறங்குகிறது காங்கிரஸ் கட்சி. தி.மு.., கூட்டணியில், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு, ஒன்பது தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், திருவள்ளூர், ஆரணி, கரூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளுக்கு, வேட்பாளர்கள் தேர்வில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் வேட்பாளர்களை இறுதி செய்வதில் கடும் இழுபறி நிலவுகிறது. மற்ற கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி மட்டும் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருப்பது, தொண்டர்கள் இடையே குழப்பத்தை ஏற்பட்டுத்தியுள்ளது. இந்நிலையில், வேட்பாளர்களை தேர்வு செய்யும், காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம், இன்று மாலை டெல்லியில் நடைபெறுகிறது. இதன் முடிவில் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான செய்திகள் :