மக்கள் அனைவரையும் பாதுகாவலர் என்று பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார் என ராகுல் காந்தி விமர்சனம்

Home

shadow


        தான் சிக்கிக்கொண்டதால் மக்கள் அனைவரையும் பாதுகாவலர் என்று பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார் என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

 ரஃபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். ‘காவலாளி ஒரு திருடன்என்று விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்நானும் காவலன்தான்என்கிற புதிய பிரசார வீடியோவை வெளியிட்டார். மேலும் அந்த பதிவில் ‘‘உங்கள் காவலன் தேசத்துடன் துணை நிற்கிறார் எனவும், தான் தனி ஆள் கிடையாது எனவும் தெரிவித்திருந்தார். மேலும் யாரெல்லாம் ஊழல், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடுகிறார்களோ அவர்கள் எல்லோரும் காவலன்தான்’’ என்று குறிப்பிட்டு டுவிட்டரில்காவலன் நரேந்திர மோடிஎன்று மாற்றம் செய்திருந்தார்இந்நிலையில், தான் சிக்கிக்கொண்டதால் மக்கள் அனைவரையும் பாதுகாவலர் என்று பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார் என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். வடக்கு கர்நாடகாவில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, “தன்னை இந்த நாட்டின் பாதுகாவலராக ஆக்குங்கள் என்று பிரதமர் மோடி மக்களிடம் கேட்டுக்கொண்டார் எனவும், ஆனால், இப்போது இந்த தேசத்தில் உள்ளவர்கள் அனைவரையும் பாதுகாவலர்கள் என்கிறார் எனில் இவ்வளவு நாட்களாக யாருக்கு பாதுகாவலராக பணியாற்றினார் என கேள்வி எழுப்பினார். அனில் அம்பானி, நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி போன்றோருக்குதான் பிரதமர் மோடி உதவியுள்ளார் என ராகுல் காந்தி தொடர்ச்சியாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இப்போது தான் சிக்கிக்கொண்டதும் இந்த தேசத்தையே பாதுகாவலர்கள் என்கிறார் என பிரதமர் மோடியின் நானும் காவலர் பிரசாரத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் ராகுல்.

இது தொடர்பான செய்திகள் :