மக்கள் ஒற்றுமையாக இருக்கும் இடத்தில் பிரிவினை பேச வந்தால் அடித்துத் துரத்துவோம்

Home

shadow

மக்கள் ஒற்றுமையாக இருக்கும் இடத்தில் பிரிவினை பேச வந்தால் அடித்துத் துரத்துவோம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வடசென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மெளரியாவுக்கு ஆதரவாக ஓட்டேரி பகுதியில் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அபோது மக்களிடையே பேசிய கமலஹாசன் இந்தப் பகுதியில் போக்குவரத்துக்குப் பயன்பட்டுக்கொண்டிருந்த நீர் வழிச் சாலைகளை எல்லாம் மாற்றிவிட்டார்கள் எனவும்  இங்கிருந்து பெரிய ஆட்களாக வர வேண்டியவர்களையெல்லாம் வளர விடாமல் இந்தச் சூழல் மழுங்கடித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார் மேலும் தாங்கள் போகும் இடங்களில் மக்களின் மனதில் இருக்கும் கொந்தளிப்பு, அவர்களின் கண்களில் தெரிவதாக கூறிய கமலஹாசன் மக்கள் ஒரு புதிய புரட்சிக்கான விதையை தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் விதைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் தாங்கள் ஒற்றுமையாக இருக்கும் இடத்தில் பிரிவினை பேச வந்தீர்கள்  என்றால் அடித்துத் துரத்தப்படுவீர்கள் எனவும் அவர் தெரிவித்தார்

இது தொடர்பான செய்திகள் :