மத்திய அரசின் திட்டங்கள் நாடு முழுவதிலும் உள்ள மக்களை சென்றடைந்துள்ளதா என்பது குறித்து பிரதமர் மோடி ஆய்வு

Home

shadow

மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மக்களின் கருத்துகளை அறிந்து தெரிவிக்குமாறு பாரதிய ஜனதா எம்.பி.க்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்திய அரசின் திட்டங்கள் நாடு முழுவதிலும் உள்ள மக்களை சென்றடைந்துள்ளதா என்பது குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக இது குறித்து பாரதிய ஜனதா எம்.பி.க்களுக்கு நமோ செயலி மூலம் அவர் 6 கேள்விகள் எழுப்பி உள்ளார்மத்திய அரசின் எந்த திட்டம் மக்களிடம் அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது? தொகுதியில் நடைமுறைப்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்களை எப்படி மதிப்பிடுகிறீர்கள்? என அவர் கேட்டுள்ளார். திட்ட பயனாளிகளுடன் குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பில் இருப்பதுடன் அவர்களின் கருத்தறிய நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்அரசாங்கத் திட்டங்கள் பற்றிய அனைத்து தகவல்களும் உள்ளதா? வேறு ஏதாவது ஆலோசனை உள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ள பிரதமர் மோடி, வரும் 11-ம் தேதிக்குள் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் இதற்கான பதில்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :