மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஜி.எஸ்.டி மாற்றியமைக்கப்படும் -ராகுல் காந்தி உறுதி

Home

shadow

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஜிஎஸ்டி மாற்றியமைக்கப்படும் என்று அக்கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில், நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், தாம் அமைத்துள்ள கூட்டணி மக்கள் கூட்டணி என்றும், தமிழ்க் கலாசாரம், தமிழ்மொழி ஆகியவற்றை பிரதமர் மோடி சிதைத்துவிட்டார் எனவும் தெரிவித்தார்இந்த மக்களவைத் தேர்தல் தமிழக மக்களின் உரிமைக் குரலாக ஒலிக்கும் என கூறிய அவர், தமிழக அரசை பிரதமர் கட்டுப்படுத்தி வருகிறார் எனவும் குற்றம் சாட்டினார். பிரதமர் மோடி ஒவ்வொரு மாநிலத்தையும் அடக்கியாள நினைப்பதாகவும், ஆனால், தமிழக மக்களை யாராலும் அடக்கியாள முடியாது என கூறிய ராகுல் காந்தி, தமிழக மக்கள் தங்களது உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்றும், அவர்கள் எப்போதும் உண்மையின் பக்கம் இருப்பார்கள் எனவும் கூறினார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன், தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் எனவும், விவசாயிகள், தொழிலாளர்கள் என எந்தத் தரப்பினரும் பாதிக்கப்படாத வகையில் ஜி.எஸ்.டி மாற்றியமைக்கப்படும் எனவும் அவர் கூறினார். மீனவர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், மீனவர்களுக்கான அமைச்சகம் அமைக்கப்படும். காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றப்படும். அதேபோல, மத்திய அரசின் வேலைவாய்ப்பிலும் பெண்களுக்கு 33 சதவீதத்துக்கும் அதிகமாக இடஒதுக்கீடு வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளையும் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி அளித்தார். இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி, திமுக தலைவர் மு.ஸ்டாலின்புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்   மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா. முத்தரசன்விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலர் வைகோ, மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பான செய்திகள் :