மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி: பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

Home

shadow

மத்தியில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பார் என பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

ஹைதராபத்தில் நடைபெற்ற முன்னாள் ராணுவத்தினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்நாட்டின் பாதுகாப்புக்கும், ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பது அவசியம் என்றும், அவர் மீண்டும் ஆட்சி அமைப்பது நிச்சயம் எனவும் கூறினார். நாட்டுக்காக உழைக்கும் பிரதமர் மோடி, மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என தெரிவித்த அவர், அதற்காக, தெலுங்கானா மக்கள், பாரதிய ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். முன்னாள் ராணுவத்தினர் நலனுக்காக மத்திய அரசு எவ்வளவோ திட்டங்களை நிறைவேற்றி உள்ளது என்றும், பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த தேசிய போர் நினைவுச்சின்னம், இந்த ஆட்சியில் பணி முடிந்து திறக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :