மனநலம் பாதிக்கப்பட்ட மரண தண்டனை கைதிகளின் தண்டனையை ரத்து செய்யலாம் - உச்சநீதிமன்றம்

Home

shadow

                     தண்டனை காலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மரண தண்டனை கைதிகளின் தண்டனையை ரத்து செய்யலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.


கடந்த 1999-ஆம் ஆண்டில் இரு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சிறையில் இருந்த காலத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு, மன நலம் பாதிக்கப்பட்டதால் அவரது தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்து வந்த நீதிபதிகள் என்.வி. ரமணா, எம்எம். சந்தானகெளடர், இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, மரண தண்டனை விதிக்கப்பட்ட பிறகு கைதிகளுக்கு மன நோய் ஏற்பட்டால், அந்த நோயைக் காரணமாகக் காட்டி அந்த தண்டனையை ரத்து செய்யலாம் என தெரிவித்தனர். அதே நேரம், இந்த வழக்கில் குற்றத்தின் கொடூரத் தன்மையைக் கருதி, குற்றவாளி தனது வாழ்நாள் முழுவதும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்றும்  உத்தரவிட்டனர். மேலும்,  அவருக்கு உரிய மன நல சிகிச்சையும் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில். மரண தண்டனைக்குப் பிறகு குற்றவாளிகள் மன நல பாதிப்புக்குள்ளாகும் வழக்குகளில், தகுதியுடைய நபர்களுக்கே தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் எனவும், இந்தத் தீர்ப்பு தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக, சிறையில் மன நல பாதிப்புக்குள்ளானதாகக் கூறப்படுவர்கள் மிகச் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் மாநில அரசுகள் தலையிட்டு, குறிப்பிட்ட மரண தண்டனை கைதி கொடிய மனநோயால் பாதிக்கப்படவில்லை என்பதை நிரூபிக்க முயல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்தங்களுக்கு மரண தண்டனை எதனால் விதிக்கப்படுகிறது என்பதை உணர்ந்துகொள்ள முடியாத அளவுக்கு குற்றவாளியின் மன நோய் தீவிரமானதாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :