மஹாராஷ்ட்ர மாநிலத்தில் சிறை சென்றவர்களுக்கு சுதந்திரப்போராட்ட வீரர்கள் என்ற அந்தஸ்து வழங்கப்படும் என்று முதலமைச்சர் தேவேந்திர பட்னவீஸ் அறிவித்துள்ளார்

Home

shadow

அவசர நிலை காலத்தில், மஹாராஷ்ட்ர மாநிலத்தில் சிறை சென்றவர்களுக்கு சுதந்திரப்போராட்ட வீரர்கள் என்ற அந்தஸ்து வழங்கப்படும் என்று முதலமைச்சர் தேவேந்திர பட்னவீஸ் அறிவித்துள்ளார்.

கடந்த 1971-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது என்று 1975 ஜுன் மாதம் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய இந்திரா காந்தி மறுத்ததால், எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனையடுத்து  1975 ஜுன் 26 முதல் நாடு முழுவதும் மிசா எனப்படும் அவசர நிலையை, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்தினார். எதிர்க்கட்சியினர்  மற்றும் தனிப்பட்ட பலர் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். செய்திகளுக்கு தணிக்கை என்பன உள்ளிட்ட பல்வேறு கெடுபிடிகள் அரங்கேறின. 1977-ல் இந்திரா தோற்று ஜனதா அரசு அமைந்த பின்னர் அவசர நிலை திரும்பப் பெறப்பட்டது. இந்த நிலையில், மஹாராஷ்ட்ர மாநிலத்தில் அவசர நிலைக் காலத்தில் சிறையில் அல்லல்பட்டவர்களுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்ற அந்தஸ்தை வழங்க பாரதிய ஜனதாவைச் சேர்ந்த முதலமைச்சர் தேவேந்திர பட்னவீஸ் முடிவு செய்துள்ளார். 2018 புத்தாண்டின் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜனநாயகத்தின் மாண்பை மக்களுக்கு விளக்கும் வகையில், பாரதிய ஜனதா ஆளும் 19 மாநிலங்களிலும் மிசாவை எதிர்த்துப் போராடி சிறை சென்ற அனைவருக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான அந்தஸ்து வழங்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பான செய்திகள் :