முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்க்கு பதிலளித்துள்ளார் சித்தராமையா

Home

shadow

காங்கிரஸ் கட்சி, நாட்டு மக்களுக்கு துயரத்தை மட்டுமே தந்தது என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார். பட்டினிச்சாவுகள்தான் பாரதிய ஜனதாவின் சாதனை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அதற்கு பதிலளித்துள்ளார்.

 

          விரைவில் நடைபெற உள்ள கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, பாரதிய ஜனதாவும் காங்கிரசும் தற்போதே பிரச்சாரம் மேற் கொண்டு வருகின்றன. காங்கிரசிடமிருந்து கர்நாடக மாநிலத்தை கைப்பற்ற பாரதிய ஜனதா முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று பெங்களூருவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் ஆட்சி குறித்து அறிந்து கொள்ள கர்நாடக அரசின் இந்திரா உணவகம் மற்றும் நியாயவிலைக்கடைகளை யோகி ஆதித்யநாத் பார்வையிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

          உத்தரபிரதேசம் போன்று இங்கு பட்டினிச்சாவுகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு ட்விட்டரில் பதிலிட்டுள்ள  யோகி ஆதித்யநாத், கர்நாடக காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கூட்டணி மக்களுக்கு இழைத்த துயரங்களை களைவதே பெரும் பணியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இரு மாநில முதலமைச்சர்களின் வார்த்தைப் போர், தேர்தல் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு பின் மேலும் தீவிரமடையும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பான செய்திகள் :