முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் முதல் வழக்கு மும்பையில் பதிவானது

Home

shadow

இஸ்லாமிய பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் நாட்டிலேயே முதல் வழக்கு மும்பையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர் ஜனாத் பேகம் படேல். இவரது கணவர் இம்தியாஸ் குலாம் படேல்மூன்று முறை வாட்ஸ் அப் மற்றும் தொலைபேசியில் தலாக் கூறி, விவாகரத்து ஆகி விட்டதாக ஜனாத் பேகத்திடம், அவரது கணவர் இம்தியாஸ் குலாம் படேல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தெரிவித்துள்ளார்அப்போது, 7 மாத கர்ப்பிணியாக இருந்த ஜனாத் பேகம், கணவரின் இந்த நடவடிக்கையால்   அதிர்ச்சி அடைந்ததாகவும்இதனால் தனக்கு குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததாகவும் கூறி காவல்நிலையத்தில் புகார் செய்தார். அப்போது அவசரச் சட்டமாக இருந்ததால், அதில், நடவடிக்கை எடுக்க காவல்துறையினர்  தயங்கியுள்ளனர். இதையடுத்து, புதிதாக முத்தலாக் தடை மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல்  பெற்று சட்டமானது. இதைத் தொடர்ந்து, தன் கணவர் மீது புதிய புகாரை  ஜனாத் பேகம் மீண்டும் அளித்தார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர், இம்தியாஸ் குலாம் மீது முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்இதுகுறித்து., ஜனாத் பேகம்  கூறுகையில், புனித நூலான குர்-ஆனுக்கு நான் எதிரானவள் இல்லை. ஆனால், என் உரிமைக்காக நான் போராடுகிறேன் என, தெரிவித்துள்ளார்.


 

இது தொடர்பான செய்திகள் :