முத்தலாக் தடைச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற கோரிக்கை

Home

shadow

முத்தலாக் கூறி விவாகரத்து செய்வோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்ட மசோதா நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கலாகிறது. அநேகமாக நாளையே மசோதா தாக்கல் ஆக வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.  இதனையடுத்து, அகில இந்திய முஸ்லீம் சட்ட வாரிய அவசரக் கூட்டம் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று கூடியது.  கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தனிச்சட்ட வாரியத் தலைவர் மவுலானா ரபி ஹசானி நத்வி, முத்தலாக் தடைச் சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றார். இது பெண்களின் உரிமை மற்றும் ஷரியத் சட்டத்தை பாதிப்பதுடன் முஸ்லீம்களின் தனிச்சட்டத்திலும் தலையிடுகிறது என்று குறிப்பிட்டார். இந்த சட்டத்தை உருவாக்குவதற்கு முன் முஸ்லீம்கள் தனிச்சட்ட வாரியத்திடமோ, வேறு எந்த முஸ்லீம் அமைப்புகளுடனோ மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய ஹசானி நத்வி, முத்தலாக் தடைச் சட்டத்தை திரும்பப் பெற பிரதமர் நரேந்திர மோடி முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பான செய்திகள் :