முத்தலாக் தடைச்சட்ட மசோதா ஏற்க தயார்- மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர்பிரசாத்

Home

shadow

 

        டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மசோதாவின் நோக்கத்தை சிதைக்காத வகையிலான பரிந்துரைகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றும் என்றார். வரலாற்று புரட்சியை ஏற்படுத்தி உள்ள முத்தலாக் தடைச்சட்ட மசோதாவை நிறைவேற்ற சோனியாகாந்தி ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அரசியல் லாபம் கருதாமல், காங்கிரஸ் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தமாக இதனைச் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களவையில் ஆதரித்த மசோதாவை, மாநிலங்களவையில் எதிர்ப்பது ஏன் என்பது குறித்து காங்கிரஸ் மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :