முத்தலாக் விவகாரம் – காங்கிரஸ் மீது அமித்ஷா தாக்கு

Home

shadow

                      மக்களவையில்  முத்தலாக் தடை மசோதாவை மத்திய  பாரதிய ஜனதா அரசு  நிறைவேற்றியது. இதற்கு இஸ்லாமிய பெண்கள் வரவேற்பும், மகிழ்ச்சியும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முத்தலாக் தடை மசோதா குறித்து டெல்லியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில், பங்கேற்றுப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முத்தலாக் நடைமுறை என்பது ஒரு முறைகேடான செயல் என்பதில் யாருக்கும் சந்தேகமும் இல்லை எனவும் மக்களவையில் சில கட்சிகள் முத்தலாக் தடை மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. ஆனால், முத்தலாக் தடை மசோதா, முஸ்லிம்களின் நலனுக்கானது என்பதை தான் தெளிவுபடுத்த விரும்புவதாகவும் குறிப்பிட்டார். மேலும்  இந்த மசோதாவை காங்கிரஸ் கட்சி வெட்கமே இல்லாமல் ஆதரிப்பதாகவும், தங்களுடைய நிலைப்பாட்டுக்கு ஒரு நியாயமான கருத்தை  அவர்களால் முன் வைக்க முடியவில்லை என்றும் அமித்ஷா குற்றம் சாட்டினார்

இது தொடர்பான செய்திகள் :