முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு

Home

shadow

                          முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.


முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன்சிங் எம்.பி. பதவிக் காலம் கடந்த ஜூன் 14-ஆம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த ராஜஸ்தான் மாநில பாரதிய ஜனதா தலைவர் மதன்லால் சைனி சமீபத்தில் காலமானார். அதனால் காலியான இடத்துக்கு வருகிற 26-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தானில் இருந்து போட்டியிட மன்மோகன்சிங் கடந்த 13-ஆம் தேதி மனுதாக்கல் செய்தார்.  இந்நிலையில் தங்களுக்கு போதுமான உறுப்பினர்கள் இல்லாத  காரணத்தால் வேட்பாளரை நிறுத்தவில்லை என அம்மாநில பாரதிய ஜனதா தலைவர் குலாம்சந்த் கடாரியா தெரிவித்துள்ளார். வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் வரையில் வேறு யாரும் மனு  தாக்கல் செய்யவில்லை.  எனவே மன்மோகன் சிங் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது

இது தொடர்பான செய்திகள் :