மும்பை கட்டிட விபத்து – 12 பேர் பலி, 7 பேர் படுகாயம்

Home

shadow

              மும்பை கட்டிட விபத்து  – 12 பேர் பலி, 7 பேர் படுகாயம்

             மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில், 12 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ள மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மும்பை டோங்கிரி பகுதியில் உள்ள தண்டல் தெருவில் இன்று மதியம், 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.

இந்த கட்டிடத்திற்குள் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இது குறித்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டிட இடிபாடுகளில், சுமார் 15 குடும்பங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுவரை 12 பேர் உயிரிழந்த நிலையிலும் 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இது தொடர்பான செய்திகள் :