மும்பை கட்டிட விபத்து - தொடரும் மீட்பு பணிகள்

Home

shadow

                 மும்பை கட்டிட விபத்து - தொடரும் மீட்பு பணிகள் 

                 மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கியவர்களை மோப்ப நாய் உதவியுடன் மீட்கும் பணிகள் நடைபெறும் நிலையில் இரு சிறாரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மும்பை டோங்ரியில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் ஒன்று செவ்வாய் அன்று காலை 11.40 மணியளவில் இடிந்து விழுந்தது.  இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சிறுவர்கள் உள்பட 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மோப்ப நாய் உதவியுடன் இடிபாடுகளுக்குள் வேறு யாரேனும் சிக்கியுள்ளார்களா என தேடி வருகின்றனர்.

ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடத்தை விட்டு காலி செய்யுமாறு 2017-ம் ஆண்டே குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், அதன்பின் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுடன் மருத்துவச் செலவையும் மகாராஷ்டிர அரசே ஏற்கும் என்றும் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :