மும்பையில் கனமழை காரணமாக, ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியதால் சிக்கித்தவித்த வெளியூர் பயணிகள் 2000 பேர் மீட்பு

Home

shadow


மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியதால் சிக்கித்தவித்த வெளியூர் பயணிகள் 2000 பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

மும்பையில் கடந்த 4 நாட்களாக பெய்துவரும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கி நிற்கிறது. தாணேபால்கர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தண்டவாளத்தில் நீர் தேங்கியுள்ளதால், புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில், மும்பை நோக்கி வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் வதோதரா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாலா சோபாரா மற்றும் வசாய் ரெயில் நிலையங்களுக்கு இடையில் நிறுத்தப்பட்டன. தண்டவாளத்தில் மழைநீர் 2 மீட்டர் உயரத்திற்கு தேங்கியதால் மேற்கொண்டு ரெயிலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. பயணிகளும் இறங்கி செல்ல முடியவில்லை. இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்களுக்கு உதவியாக பேரிடர் மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டனர். 6 படகுகள் மூலம் இரண்டு ரெயில்களிலும் பயணம் செய்த சுமார் 2000 பயணிகளை மீட்கப்பட்டு, அவர்கள் செல்ல வேண்டிய பகுதிக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். பால்கர் மாவட்டத்தில் அதிகபட்ச அளவாக 240 மிமீ மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :