மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 14 பேர் உயிரிழப்பு

Home

shadow

மும்பையில் உள்ள கமலா மில்ஸ் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கட்டிடத்தின் 3வது தளத்தில் நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து 12 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், பல மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பான செய்திகள் :