மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை குஜராத் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்

Home

shadow

            மதிப்பிழப்பு செய்யப்பட்ட மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய 500 மற்றும்  ஆயிரம் ரூபாய் நோட்டுகளை குஜராத் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.


நாடு முழுவதும் பதுக்கி வைக்கப்பட்ட கருப்பு பணத்தை வெளி கொண்டு வரும் நோக்கில், 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இதனை தொடர்ந்து, நாடு முழுவதும் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் ஒப்படைக்கப்பட்டன. இதனிடையே பதுக்கல் காரர்கள் சிலர் தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை குப்பைகள், ஏரிகள் போன்றவற்றில் வீசி சென்றனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்து இரண்டு ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில், மதிப்பிழப்பு செய்யப்பட்ட மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய 500 மற்றும்  ஆயிரம் ரூபாய் நோட்டுகளை குஜராத் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி பகுதியை சேர்ந்த பிலிமோரா என்ற கிராமத்தில் மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக நான்கு பேரை கைது செய்துள்ளனர்அவர்களிடம் இருந்து ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 13 ஆயிரத்து 432 ரூபாய் நோட்டுகள் மற்றும் ஐநூறு  ருபாய் மதிப்பிலான 43 ஆயிரத்து 300 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பான செய்திகள் :