மேற்கு வங்கம் - உள்துறை அமைச்சகம்

Home

shadow


மேற்குவங்க மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது. வன்முறை சம்பவங்கள் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் நீண்ட சட்ட போராட்டங்களுக்கு பிறகு, நேற்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் பல வாக்குச் சாவடிகளில் திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாரதிய ஜனதா தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. முர்ஷிதாபாத், வடக்கு தீனஜ்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வாக்குச் சாவடிகள் சூறையாடப்பட்டன. தேர்தல் தொடர்பான வன்முறைச் சம்பவங்களில் 16 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். பல இடங்களிலும் போராட்டங்களும் நடைபெற்றன. வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில் தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 17ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு, மேற்குவங்க அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

இது தொடர்பான செய்திகள் :