மோடி பிரதமரானால் ராகுல் பொறுப்பு - கெஜ்ரிவால் கருத்து

Home

shadow

                                       மீண்டும் மோடி பிரதமரானால் அதற்கு ராகுல் காந்திதான் பொறுப்பு என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.  

ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் பிரபல செய்தி நிறுவனத்துக்கு இன்று பேட்டியளித்தார். இந்த பேட்டியின்போது அரசியல் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். 
நாட்டுக்கு எதுவுமே செய்யாத பிரதமர் நரேந்திர மோடியின் தேசபக்தி போலியானது என்று குற்றம்சாட்டிய கெஜ்ரிவால், தனது ஆட்சியின் சாதனை என்று கூறிக்கொள்ள மோடியிடம் எதுவுமே இல்லாததால் ராணுவ வீரர்களின் சாகசங்களை எல்லாம் தனது சாதனை என்றுகூறி மக்களிடம் ஓட்டு கேட்கிறார் என்று கூறினார். ’மோடியைவிட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆயிரம் மடங்கு மேலானவர். மோடியும் அமித் ஷாவும் மீண்டும் பதவிக்கு வரக்கூடாது என்பதுதான் எங்களின் முக்கிய நோக்கம். இவர்களை தடுக்க நாங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு அளிப்போம்,’ என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.
டெல்லியில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ், கேரளாவில் மா.கம்யூனிஸ்ட், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ், ஆந்திராவில் தெலுங்கு தேசம், டெல்லியில் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற முடியாதவாறு காங்கிரஸ் கட்சி இடையில் நின்று குழி பறிக்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.. மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்து மோடி பிரதமரானால் அதற்கு ராகுல் காந்திதான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கெஜ்ரிவால் தெரிவித்தார். 

இது தொடர்பான செய்திகள் :